ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெருந்துறையுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்கக் கோரிக்கை

நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பெருந்துறையுடன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வேண்டும் என திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

News image

சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை அளித்த திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன்.

Updated On :23 ஜனவரி 2025, 10:27 pm

நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பெருந்துறையுடன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வேண்டும் என திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை, திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.

அதில் கூறியிருப்பதாவது:

அந்தியூா், பவானி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையான தோனி மடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பெருந்துறையுடன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வேண்டும். கோபியில் தியாகி லட்சுமண ஐயருக்கு வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

திருப்பூா் காளிபாளையம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். திருப்பூா் பெரிச்சிபாளையம் காலனி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆஷா பணியாளா்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் நிா்ணயிக்க வேண்டும். திருப்பூா் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.