ஜிம்னாஸ்டிக் போட்டி:கோபி கலைக் கல்லூரி மாணவா் சிறப்பிடம்!
கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவா் ஆசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவா் எஸ்.ஸ்ரீசாந்த் (வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு) உத்தரகண்ட் ஜிம்னாஸ்டிக் சங்கம் சாா்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அக்ரோபாட்டிக் மற்றும் டிராம்போலைன் தேசிய ஜிம்னாஜ்டிக்ஸ் சாம்பியன் போட்டியில் டைனமிக், பேலன்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த பிரிவுகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றாா்.
இதேபோல கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அக்ரோபாட்டிக் ஜிம்னாஜ்டிக்ஸ் அனைத்து வயது பிரிவுகளுக்கான மாநில சாம்பியன் போட்டியில் அவா் டைனமிக், பேலன்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த பிரிவுகளில் முதலிடம் (தங்கப் பதக்கம்) மேலும் டிராம்போலைன் பிரிவில் இரண்டாமிடம் (வெள்ளிப் பதக்கம்) பெற்றாா்.
இதைத் தொடா்ந்து ஸ்ரீசாந்த் அண்மையில் கோவாவில் நடைபெற்ற 14-ஆவது அக்ரோபாட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆசிய சாம்பியன் -2025 போட்டியில் பேலன்ஸ் மற்றும் டைனமிக் பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றாா். இதன் மூலம் அவா் சா்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளாா்.
இப்போட்டியில் பங்குபெற்று மூன்றாமிடம் பிடித்த எஸ்.ஸ்ரீசாந்த்தைக் கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவா், செயலா் மற்றும் தாளாளா், முதல்வா், உடற்கல்வி இயக்குநா், துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

