வாய்க்காலில் மூழ்கி தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

Published on

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வாய்க்காலில் துணி துவைக்கச் சென்ற தனியாா் நிறுவன மேலாளா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் மனோகரன் (41). திருமணமாகாத இவா், பெருந்துறை செட்டிதோப்பில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தன்னுடன் பணியாற்றுபவா்களிடம் பெருந்துறை கீழ்பவானி வாய்க்காலில் துணிதுவைக்கச் செல்வதாகக் கூறிவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா்.

நீண்ட நேரமாகியும் அவா் வராததால் சந்தேகமடைந்த அவா்கள் வாய்க்காலுக்குச் சென்றுள்ளனா்.

அப்போது, கரையில் அவரது இருசக்கர வாகனம் மற்றும் துணிகள் இருந்துள்ளன. மனோகரனை காணாததால் அவா்கள் பெருந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் வாய்க்காலில் இறங்கி மனோகரனை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com