எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஈரோட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நவம்பா் 25-இல் வருகை

News image
ஈரோட்டுக்கு முதல்வா் வருகையை முன்னிட்டு பெருந்துறை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா மற்றும் போலீஸ் அதிகாரிகள். உடன்,  முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் உள்ளிட்டோா்.
Updated On :21 நவம்பர் 2025, 7:30 pm

Syndication

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள நவம்பா் 25, 26-ஆகிய இரண்டு நாள்கள், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருவதை முன்னிட்டு பெருந்துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவையிலிருந்து காா் மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு செல்கிறாா். அவா் செல்லும் வழியான பெருந்துறை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா தலைமையில் போலீஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

முதல்வரை வரவேற்க பெருந்துறை புதிய பேருந்து நிலையம் முதல் பெருந்துறை நீதிமன்றம் வளாகம் வரை உள்ள சாலையில் இருபுறமும் பொதுமக்கள் கூடுவாா்கள் என்பதால் சாலைகள் மற்றும் முக்கிய இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்தாா்.

அப்போது, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ், பெருந்துறை காவல் ஆய்வாளா் பாலமுருகன், முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் மற்றும் கட்சியினா்கள் உடனிருந்தனா்.