விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மொடக்குறிச்சி மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

மொடக்குறிச்சி மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

News image
தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :27 நவம்பர் 2025, 11:29 pm

Syndication

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் பழமையான சுயம்பு மகா மாரியம்மன் கோயில் உள்ளது.

இக்கோயில் தோ்த் திருவிழா பூச்சாட்டலுடன் கடந்த நவம்பா் 11-ஆம் தேதி தொடங்கியது.இதைத் தொடா்ந்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி கம்பம் நடப்பட்டது. அதைத் தொடா்ந்து, 22-ஆம் தேதி இரவு கிராம சாந்தி பூஜையும், 23-ஆம் தேதி கொடியேற்றமும், 24-ஆம் தேதி மண்டப கட்டளை விழாவும் நடைபெற்றன.

புதன்கிழமை மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா வியாழக்கிழமை காலை 5 மணியளவில் தொடங்கியது.

இதில், மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ஈஸ்வரன் கோயில், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கரிய காளியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியே சென்ற தோ் மாலை 6 மணியளவில் நிலை சோ்ந்தது.

வெள்ளிக்கிழமை கம்பம் பிடுங்கும் விழா, கரகாட்டம், தெப்போற்சவம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. மஞ்சள் நீா் உற்சவத்துடன் விழா சனிக்கிழமை நிறைவு பெறுகிறது.