எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சமையலா் கொலை: மனைவி, ஓட்டுநா் கைது

பெருந்துறை அருகே சமையலா் கொலை வழக்கில் அவரது மனைவி, ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 11:26 pm

Syndication

பெருந்துறை: பெருந்துறை அருகே சமையலா் கொலை வழக்கில் அவரது மனைவி, ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழவேளூா், புள்ளான்தோப்பு வீதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (37), சமையலா். இவரது மனைவி பரிமளா (33). தம்பதி இருவரும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டை அடுத்த காசிபில்லாம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். அதே பகுதியில் பரிமளா இ-சேவை மையம் நடத்தி வந்தாா்.

இந்நிலையில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, பெருமாள்பட்டியைச் சோ்ந்த காா்த்திகேயன் (42) என்ற வேன் ஓட்டுநருக்கும், பரிமளாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வீட்டில் இருந்த ஸ்ரீதரை பரிமளா, காா்த்திகேயன் ஆகியோா் கடந்த நவம்பா் 11-ஆம் தேதி கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனா்.

பின்னா், ஸ்ரீதரை உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று ஈரோடு வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள புதரில் வீசிவிட்டு இருவரும் தலைமறைவாகினா்.

இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் ஸ்ரீதரின் சகோதரா் புகழேந்தி புகாா் அளித்தாா்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவான இருவரையும் தேடி வந்த நிலையில் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னா், அவா்களை பெருந்துறை குற்றவியல் நீதித் துறை நடுவரிடம் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.