பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மழை, கடும் பனிப்பொழிவால் பாதிப்பு! சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ.6,640!

சத்தியமங்கலம் பகுதியில் விட்டுவிட்டு பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 8:37 pm

Syndication

சத்தியமங்கலம் பகுதியில் விட்டுவிட்டு பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரு கிலோ ரூ.3 ஆயிரமாக இருந்த மல்லிகைப் பூ விலை சனிக்கிழமை ரூ.6,640 -ஆக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் மேகமூட்டமான காலநிலையும் நிலவுகிறது. இதற்கிடையே பகல் நேரத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சத்தியமங்கலம், பவானிசாகா், செண்பகப்புதூா், தாண்டாம்பாளையம், கெஞ்சனூா் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் சாகுபடி செய்த மல்லிகைப் பூ மகசூல், ஒரு டன்னில் இருந்து 50 கிலோவாக குறைந்துள்ளது.

வரத்து குறைவு காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மல்லிகைப் பூக்களை வாங்க வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. இதனால் வெள்ளிக்கிழமை கிலோ ரூ.3 ஆயிரமாக இருந்த மல்லிகைப் பூ, சனிக்கிழமை ரூ. 6,640-ஆக அதிகரித்துள்ளது.

முகூா்த்த தினம் என்பதாலும், வரத்து குறைந்து தேவை அதிகரித்துள்ளதாலும் பூக்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், வரத்து குறைவால் கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கு பூக்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.