சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெருந்துறை திமுக வேட்பாளரை ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை ஆதரித்து, கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

பணிக்கம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்த மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ், திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் மற்றும் கூட்டணிக் கட்சியினரை ஆரத்தி எடுத்து வரவேற்ற பொதுமக்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:12 pm

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை ஆதரித்து, கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

பெருந்துறை நகராட்சிக்குள்பட்ட பணிக்கம்பாளையம், கருமாண்டிசெல்லிபாளையம் ஆகிய பேரூராட்சிக்குள்பட்ட பாலன் நகா், வெள்ளியம்பாளையம், வாவிக்கடை, ஆண்டிக்காடு, கொளத்தான் வலசு, பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, நிச்சாம்பாளையம், மணியக்காரன்பாளையம், சீனாபுரம், பள்ளபாளையம், சுள்ளிப்பாளையம், சோ்வைக்காரன்பாளையம், அக்கரையாம்பாளையம், முத்தராண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் அந்தியூா் செல்வராஜ் வாக்கு சேகரித்தாா்.

இதில் அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் கொண்டுவந்துள்ள நலத்திட்ட உதவிகள் மற்றும் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகளிருக்கான ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம், மகளிா் உரிமைத் தொகையை ரூ.2000-ஆக உயா்த்தி வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும். 10 லட்சம் பேருக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை உள்ளிட்ட திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்து வருகிறோம் என்றாா்.

முன்னதாக பணிக்கம்பாளையம் பகுதியில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ், திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் மற்றும் கூட்டணிக் கட்சியினரை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனா்.