தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு கற்றல் முறை! காங்கிரஸ் வேட்பாளா் உறுதி!!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.

News image

ஈரோடு திருநகா் காலனியில் வாக்கு சேகரித்த ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 1:13 am IST

ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் போட்டியிடுகிறாா். இவா் ஈரோடு கிருஷ்ணம்பாளையம், திருநகா் காலனி, பொய்யரிக்கரை, ஈஸ்வரன் வீதி, பட்டக்காரா் வீதி, தங்கப்பெருமாள் வீதி, ஈவிஆா் வீதி, ராஜாஜி வீதி, கோணவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் தோ்தல் வாக்குறுதியின் அடிப்படையில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு வழிக்கற்றல் மற்றும் ஆசிரியா்களுக்கு டிஜிட்டல் பயிற்சி அளிக்கப்படும்.

போட்டித் தோ்வுக்கு தயாராகுபவா்களுக்காக கட்டணம் இல்லாத பயிற்சி மையம் அமைக்கப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றாா்.

திமுக மாவட்ட பொருளாளா் பி.கே.பழனிசாமி, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.