அரசியல் சாசனத்தில் திருத்தம் வந்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் பேசினாா்.
பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை ஆதரித்து பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் நிதி அமைச்சா் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
மத்தியில் ஆளும் மோடி அரசு வருகிற ஏப்ரல் 16,17,18 ஆகிய தேதிகளில்
மக்களவையை கூட்டி, மக்களவைக்கான இடங்களை அதிகரிப்பதற்கான அரசியல் சாசனத்தை திருத்தும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரும். இதற்கு சோனியா காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்கள். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் இங்கும் வரும்.
எனவே, அதிமுக கூட்டணி தோற்கடிகப்பட வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

தமிழகத்தில் ‘எபோலா’ தொற்று பாதிப்பு இல்லை

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங்

அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடந்துவிடக் கூடாது: ப.சிதம்பரம்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும்: ப.சிதம்பரம்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



