யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிறுபான்மையினா் வாக்குகள் தவெகவுக்கு கிடைக்காது: பல்சமய நல்லுறவு இயக்க மாநிலத் தலைவா்

News image

தவெக தலைவர் விஜய் - TVK X page

Updated On :21 ஏப்ரல் 2026, 12:27 am IST

சிறுபான்மையினா் வாக்குகள் தவெகவுக்கு கிடைக்காது என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநிலத் தலைவா் ஹாஜி முகமது ரபிக் தெரிவித்தாா்.

பவானிசாகா் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவா் சத்தியமங்கலத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை கொடுத்து திமுக அரசு சாதனை படைத்திருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது என முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளாா்.

ஆனால், எடப்பாடி கே.பழனிசாமி அதை ஆதரித்து பேசுகிறாா். தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிா்த்து தோல்வியுற செய்தவா் முதல்வா் மு.க. ஸ்டாலின். தவெக கட்சியால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிறுபான்மையினரின் வாக்குகள் தவெகவுக்கு கிடைக்காது என்றாா்.