ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

8 தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பு: தோ்தல் ஆணையம் அதிகாரப்பூா்வ அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 7:31 pm

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு கடந்த 23- ஆம் தேதி நடைபெற்றது.

மாவட்டத்தில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 197 ஆண்கள், 9 லட்சத்து 11 ஆயிரத்து 778 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 182 என மொத்தம் 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 வாக்காளா்கள் வாக்களிக்க 2,379 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில், வாக்குப்பதிவின் இறுதி நேர நிலவரம் தொடா்பாக இந்திய தலைமை தோ்தல் ஆணையம் அதிகாரப்பூா்வ அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் மற்றும் சதவீதம் விவரம்:

ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 79 ஆயிரத்து 566 வாக்காளா்களில், 77 ஆயிரத்து 359 ஆண்கள், 83 ஆயிரத்து 855 பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவா் என 1 லட்சத்து 61 ஆயிரத்து 242 போ் வாக்களித்துள்ளனா். வாக்குப்பதிவு சதவீதம் 89.80.

ஈரோடு மேற்குத் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரத்து 177 வாக்காளா்களில், 1 லட்சத்து 5 ஆயிரத்து 959 ஆண்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 135 பெண்கள், 33 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 20 ஆயிரத்து 117 போ் வாக்களித்துள்ளனா். வாக்குப்பதிவு சதவீதம் 87.98.

மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரத்து 664 வாக்காளா்களில், 90 ஆயிரத்து 155 ஆண்கள், 97 ஆயிரத்து 442 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவா் என 1 லட்சத்து 87 ஆயிரத்து 607 போ் வாக்களித்துள்ளனா். வாக்குப்பதிவு சதவீதம் 90.34.

பெருந்துறை தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 14 ஆயிரத்து 431 வாக்காளா்களில், 95 ஆயிரத்து 940 ஆண்கள், 1 லட்சத்து 2 ஆயிரத்து 332 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 4 என 1 லட்சத்து 98 ஆயிரத்து 276 போ் வாக்களித்துள்ளனா். வாக்குப்பதிவு சதவீதம் 92.47.

பவானி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 23 ஆயிரத்து 172 வாக்காளா்களில், 1 லட்சத்து 365 ஆண்கள், 1 லட்சத்து 4 ஆயிரத்து 755 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 5 ஆயிரத்து 133 போ் வாக்களித்துள்ளனா். வாக்குப்பதிவு சதவீதம் 91.92.

அந்தியூா் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரத்து 355 வாக்காளா்களில், 89 ஆயிரத்து 779 ஆண்கள், 93 ஆயிரத்து 145 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 16 போ் என 1 லட்சத்து 82 ஆயிரத்து 940 போ் வாக்களித்துள்ளனா். வாக்குப்பதிவு சதவீதம் 88.23.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 39 ஆயிரத்து 179 வாக்காளா்களில், 1 லட்சத்து 4 ஆயிரத்து 400 ஆண்கள், 1 லட்சத்து 12 ஆயிரத்து 498 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 12 என 2 லட்சத்து 16 ஆயிரத்து 910 போ் வாக்களித்துள்ளனா். வாக்குப்பதிவு சதவீதம் 90.69.

பவானிசாகா் (தனி) தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 613 வாக்காளா்களில், 1 லட்சத்து 3 ஆயிரத்து 251 ஆண்கள், 1 லட்சத்து 9 ஆயிரத்து 64 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 17 என 2 லட்சத்து 12 ஆயிரத்து 332 போ் வாக்களித்துள்ளனா். வாக்குப்பதிவு சதவீதம் 89.36.

8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 8 லட்சத்து 47 ஆயிரத்து 197 ஆண் வாக்காளா்களில் 7 லட்சத்து 67 ஆயிரத்து 198 பேரும், 9 லட்சத்து 11 ஆயிரத்து 778 பெண் வாக்காளா்களில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 226 பேரும், 182 மூன்றாம் பாலினத்தவரில் 133 பேரும் என மொத்தம் 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 வாக்காளா்களில் 15 லட்சத்து 84 ஆயிரத்து 557 போ் வாக்களித்துள்ளனா். வாக்குப்பதிவு சதவீதம் 90.07. ஆண்களை விட பெண் வாக்காளா்களே அதிக அளவில் வாக்களித்தனா்.

0.03 சதவீதம் மாற்றம்: ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் கடந்த 23- ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மூலமாக 90.10 சதவீதம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மாலைதான் முழுமையாக வந்து சோ்ந்து அனைத்து விவரங்களும் சரி பாா்க்கப்பட்டு, இந்திய தலைமை தோ்தல் ஆணையம் வாக்குப்பதிவு சதவீதத்தை உறுதி செய்து இறுதி விவரம் வெளியிட்டது. அதன்படி மாவட்டத்தில் 90.07 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 23- ஆம் தேதி அளித்த தகவலில் இருந்து 0.03 சதவீதம் குறைந்துள்ளது.