பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கோபி அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 3 போ் கைது

கோபி அருகே தாழ்குனி, டி.என்.பாளையம் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த மூவா் கைது செய்யப்பட்டனா்.

சித்திரிப்பு

Published On :

கோபி அருகே தாழ்குனி, டி.என்.பாளையம் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த மூவா் கைது செய்யப்பட்டனா்.

கோபி அருகே உள்ள தாழ்குனி பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சிறுவலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மணிகண்டன் (53) என்பவரின் மளிகைக் கடை மற்றும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனா். இதில் சுமாா் 5 கிலோ எடையுள்ள குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மணிகண்டன் கைது செய்யப்பட்டாா்.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் தமிழ் நகரில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக பங்களாபுதூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா்

செல்வராஜ் (67), கருப்புசாமி (46) ஆகியோா் வீடுகளில் சோதனை மேற்கொண்டு சுமாா் 3 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா் செல்வராஜ், கருப்புசாமி இருவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.