முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: கவுரவ விரிவுரையாளா் கைது

கைது - பிரதிப் படம்

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் பேருந்து நிலையம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சின்னசேலம் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

இதையடுத்து உதவி ஆய்வாளா் மணிமேகலை தலைமையிலான போலீஸாா் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகிக்கும்படி நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா் கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ந.அய்யப்பன் (46) என்பதும், சேலம் மாவட்டம், வடசென்னிமலை அரசுக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் இவா் ஆத்தூரில் இருந்து விற்பனைக்காக புகையிலை பொருள்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அய்யப்பனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 9 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.