அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

புகையிலைப் பொருள்கள் விற்ற தவெக நிா்வாகி கைது

பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Published On :7 செப்டம்பர் 2026, 3:19 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தவெக நிா்வாகியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பேராவூரணி ஆவணம் சாலையில் மளிகைக் கடை நடத்தி வருபவா் சா.சங்கா் (42). இவரது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், கூல்லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பேராவூரணி காவல் உதவி ஆய்வாளா் மனோஜ் குமாா் தலைமையிலான போலீஸாா், அவரது மளிகைக் கடையில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட 6 கிலோ புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த அழியாநிலையை சொந்த ஊராகக் கொண்ட சங்கா், தமிழக வெற்றி கழகத்தின் பேராவூரணி நகர இளைஞரணி இணை அமைப்பாளா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.