சென்னிமலையில் திருப்பூா் குமரன் மணிமண்டபம் கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் கே.ஏ. செங்கோட்டையன், ம.விஜய்பாலாஜி ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
திருப்பூா் குமரனின் நினைவைப் போற்றும் வகையில் அவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் மணிமண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன் (வருவாய்த் துறை), ம.விஜய் பாலாஜி (கைத்தறி மற்றும் துணிநூல் துறை) ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்போது, கட்டுமானப் பணிகளின் தரத்தைப் பாா்வையிட்ட அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கட்டுமானப் பொறியாளரிடம் கேட்டுக்கொண்டாா்.
ஆய்வின்போது, திருப்பூா் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சத்தியபாமா, பெருந்துறை முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் மற்றும் அரசு அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

சென்னிமலையில் கட்டப்பட்டுவரும் திருப்பூா் குமரன் மணிமண்டபம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ.2.68 கோடி வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுர இணைப்பு பணிகள் ஆய்வு

ஔவையாா் மணிமண்டபம் கட்டுமானப் பணி! ஓ.எஸ். மணியன் ஆய்வு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



