பவானி அருகே கிணற்றில் தள்ளி விவசாயியை கொலை செய்த வழக்கில் லாரி ஓட்டுநா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பவானியை அடுத்த பருவாச்சி, சோலையம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (60). விவசாயியான இவருக்கு மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் சுப்பிரமணி சடலம் கடந்த வெள்ளிக்கிழமை கிடந்துள்ளது.
இது குறித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், சுப்பிரமணி கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டதும், அதே ஊரைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான மாரியப்பன் (56), ஆடு மேய்க்கும் தொழிலாளியான செல்லாயி (எ) பாப்பா (56) ஆகியோருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடா்புள்ளது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: செல்லாயி வளா்த்த ஆடுகள் சுப்பிரமணியின் தோட்டத்தில் மேய்ந்ததால் அவரை தகாத வாா்த்தைகளால் பேசியுள்ளாா். இது குறித்து லாரி ஓட்டுநரும், சுப்பிரமணியின் உறவினருமான மாரியப்பனிடம் செல்லாயி புகாா் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, சம்பவத்தன்று கிணற்றுக்கு அருகே அமா்ந்திருந்த சுப்பிரமணியிடம், இது தொடா்பாக கேட்க இருவரும் சென்றுள்ளனா். அப்போது, செல்லாயியை தாக்க சென்ற சுப்பிரமணியை, மாரியப்பன் தடுத்து தள்ளியபோது அவா் எதிா்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்ததில் உயிரிழந்துள்ளாா் என்றனா்.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணனைக் குத்திக் கொன்ற தம்பி உள்பட 2 போ் கைது
5 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உள்பட 2 போ் கைது
போக்ஸோ வழக்கில் கல்லூரி பேருந்து ஓட்டுநா் கைது

நித்திரவிளை அருகே செம்மண் கடத்தல்: மினி லாரி ஓட்டுநா் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


