காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

5 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உள்பட 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 2:47 am IST

திருப்பூா், ஜூலை 26: திருப்பூரில் 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், சிறுவன் உள்பட 2 பேரைக் கைது செய்தனா்.

திருப்பூா், காலேஜ் சாலை குடியிருப்புப் பகுதியில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகர போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஒரு வீட்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வீட்டில் இருந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த வாஞ்சிகுமாா், 17 வயது சிறுவன் என்பதும், பிகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவைக் கடத்தி வந்து, திருப்பூரில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.