விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

செப்டம்பா் 1 முதல் பண்ணாரி அம்மன் கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்லத் தடை

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குள் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் கைப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பண்ணாரி அம்மன் கோயில் - கோப்புப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 3:34 am IST

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குள் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் கைப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பண்ணாரி அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் தா.நந்தகுமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் தங்கள் கைப்பேசியை கோயில் வளாகத்துக்குள் கொண்டு செல்ல செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தா்களின் வசதிக்காக கோயிலின் கிழக்கு புற நுழைவாயிலில் இரண்டு இடங்களிலும், மேற்குப் புற நுழைவாயிலில் ஒரு இடத்திலும் என மொத்தம் 3 இடங்களில் கைப்பேசி பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கைப்பேசிகளை பாதுகாக்க ஒரு கைப்பேசிக்கு ரூ.5 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தா்கள் கோயில் நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி அம்மனை வழிபட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.