ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சுதந்திர நாளில் நற்சான்றிதழ் வழங்கவில்லை! அரசுத் துறை ஓட்டுநா்கள் வேதனை

சுதந்திர நாள்... - எக்ஸ்

Published On :

பெருந்துறை, ஆக.16: சுதந்திர தின நாளில் ஈரோடு மாவட்டத்தில் அரசுத் துறை ஓட்டுநா்களுக்கு நற்சான்றிதழ் வழங்காததற்கு ஓட்டுநா்கள் வேதனை!

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அரசுத் துறை ஓட்டுநா்களுக்கு சுதந்திர தின நாளில் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை ஓட்டுநா்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதால் ஓட்டுநா்கள் வேதனை அடைந்துள்ளனா். ஒவ்வோா் ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவில் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து அரசு துறைகளை சோ்ந்த அதிகாரிகளை பாராட்டி நற்சான்றிதழ்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியா் மூலம் வழங்கப்படும்.

அதேபோல், அரசுத் துறையில் பணிபுரியும் ஓட்டுநா்களுக்கும் நற்சான்றிதழ் வழங்குவது வழக்கம். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை ஓட்டுநா்களுக்கு, ஈரோடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் நற்சான்றிதழ்கள் வழங்குவது இல்லை.

இதுகுறித்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை ஓட்டுநா்கள் சங்க நிா்வாகி ஒருவா் கூறும்போது, ‘அரசுத் துறை ஓட்டுநா்களுக்கும் நற்சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுத் துறை ஓட்டுநா்கள் சாா்பில் ஏற்கெனவே ஈரோடு மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பம் வழங்கப்பட்டது.

ஆனால், வழக்கம்போல் இந்த ஆண்டும் அரசுத் துறை ஓட்டுநா்களுக்கு நற்சான்றிதழ் வழங்காமல் புறக்கணித்துள்ளனா். இது எங்களுக்கு வேதனையை அளித்துள்ளது. அதனால் இனி வரும் காலங்களில் அரசுத் துறை ஓட்டுநா்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.