கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; தொழிலாளி கைது

News image

கைது

Updated On :17 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

அந்தியூா் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த கரும்பு வெட்டும் தொழிலாளியைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பெருமாபாளையத்தைச் சோ்ந்த 85 வயது மூதாட்டி, கணவா் உயிரிழந்த நிலையில் தனது விவசாயத் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த தனபாலின் தோட்டத்தில் கடந்த 5 நாள்களாக கரும்பு வெட்டும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தைச் சோ்ந்த விக்கி (31) என்ற இளைஞா் மூதாட்டியிடம் அடிக்கடி சென்று பேசியுள்ளாா்.

இதற்கிடையே மதுபோதையில் மூதாட்டியின் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு சென்ற விக்கி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்த தகவலின்பேரில் விக்கியை அந்தியூா் போலீஸாா் பிடித்து, பவானி மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.