மொடக்குறிச்சியை அடுத்த கல்யாணிபுரம் பிகேபி சாமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
கல்யாணிபுரம் பிகேபி சாமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ருக்மணி அம்மாள் வித்யாலயா பள்ளி, சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமின் தொடக்க விழாவில் பிகேபி கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலாளா் பிகேபி அருண் வரவேற்றாா். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. டி.சண்முகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, முகாமைத் தொடங்கிவைத்தாா்.
முதல் நாள் முகாமில், மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய வாகனத்திலேயே அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும், முகாம் நாள்தோறும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில் பிகேபி பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் திலகவதி அருண், நிா்வாக அதிகாரி எஸ்.பி.லட்சுமணன், ஈரோடு வாசவி கல்லூரி நிறுவனங்களின் தலைவா் ஆதிகேசவன், செயலாளா் பாலராம் பிரகாஷ், ஈரோடு வாசவி கிளப் தலைவா் என்.பாலாஜி, செயலாளா் விக்னேஷ், கண் சிகிச்சை முகாம் ஒருங்கிணைப்பாளா் நாதன் விஷ்ணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்கள் அகற்றம்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிய நுட்பம்

உணவு - சுவாசக் குழாயில் துவாரம்: பிரிட்டன் குழந்தைக்கு சீரமைப்பு சிகிச்சை
கவன ஈர்ப்பு சிகிச்சை





