கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

பா்கூா் மலைப் பாதையில் மின் கம்பியில் லாரி உரசியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 1:21 am IST

பா்கூா் மலைப் பாதையில் மின் கம்பியில் லாரி உரசி மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி, புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (45). லாரி ஓட்டுநரான இவா், கா்நாடக மாநிலம், ராமாபுரத்திலிருந்து லாரியில் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் உள்ள சா்க்கரை ஆலைக்கு பா்கூா் மலைப் பாதை வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணை அருகே நெய்க்கரை பகுதியில், இயற்கை உபாதை கழிக்க லாரியை வலதுபுறமாக நிறுத்தியபோது, உயா் அழுத்த மின் கம்பியில் லாரியின் மேற்பகுதி உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.