படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

பெருந்துறையில் தீ விபத்தில் வீடு, காா், பணம் எரிந்து சேதம்

பெருந்துறையில் மின் கசிவால் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வீடு, காா் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தீ - பிரதிப் படம்

Published On :

பெருந்துறையில் மின் கசிவால் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வீடு, காா் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பெருந்துறை- குன்னத்தூா் சாலையைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி கோமதி (36). இவா் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான இடத்தை வாடகை எடுத்து மூங்கில் கடையும் அருகே தென்னங் கீற்றால் வேயப்பட்ட வீடு அமைத்தும் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், மின் கசிவால் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுவதும் தீயில் எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்ததில் உள்ளே வைக்கப்பட்டிருந்த சொத்துப் பத்திரங்கள், 6 பவுன் நகைகள், பணம் ரூ. 6.5 லட்சம் மற்றும் காா் ஆகியவை சேதமடைந்தன.

தகவல் அறிந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.