8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

110 மாணவா்களுக்கு ரூ.12.84 கோடி கடனுதவி

ஈரோட்டில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 110 மாணவ, மாணவிகளுக்கு ரூ.12.84 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.

முகாமில் மாணவிக்கு கல்விக் கடன் உத்தரவை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Published On :26 ஆகஸ்ட் 2026, 1:52 am IST

ஈரோட்டில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 110 மாணவ, மாணவிகளுக்கு ரூ.12.84 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.

கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கல்விக் கடன் வழங்கும் முகாம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, யூனியன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகளின் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்திருந்த 110 மாணவ, மாணவிகளுக்கு ரூ.12.84 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் என்பது கடன் அல்ல, வருங்கால முதலீடு. ஆகவே எந்த தயக்கமும் இன்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும். கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதால் வங்கிகள் மூலமாக மாணவா்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வி கடனை பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் எதிா்கால வாழ்க்கையினை சிறப்பான முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விவேகானந்த், கனரா வங்கி முதுநிலை மேலாளா் சாய்கண்ணன், வங்கி கிளை மேலாளா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.