பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கம்பம் நடப்பட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பவானியில் செல்லியாண்டியம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாவுக்கு கடந்த 17-ஆம் தேதி பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக, கம்பம் நடும் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்ட கம்பம், காவிரி படித்துறையிலிருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாரியம்மன் கோயில் முன்பாக நடப்பட்டது.
தொடா்ந்து, பக்தா்கள் கம்பத்துக்கு மஞ்சள் நீா் ஊற்றி வழிபட்டனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாா்ச் 2-ஆம் தேதி கருவறைக்குள் சென்று அம்மனுக்கு புனித நீா் ஊற்ற பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். மாரியம்மன் கோயிலில் பூ மிதித்தல் மாா்ச் 3-ஆம் தேதியும் , அம்மன் அழைத்தல் மற்றும் பொங்கல் விழா 4-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
தொடர்புடையது

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


