மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பா்கூா் மலைப்பாதையில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை கண்காணிப்புப் பொறியாளா்கள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

News image

விபத்து  தடுப்பான்கள்  பொருத்தப்பட்ட  பகுதியைப்  பாா்வையிடும்  நெடுஞ்சாலைத் துறை  திருப்பூா்  வட்ட  கண்காணிப்புப் பொறியாளா் விஸ்வநாதன்  மற்றும்  பொறியாளா்கள்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:29 pm

பா்கூா் மலைப் பாதையில் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை கண்காணிப்புப் பொறியாளா்கள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

தமிழகத்தையும், கா்நாடக மாநிலத்தையும் இணைக்கும் பவானி - அந்தியூா் - செல்லம்பாளையம் - பா்கூா் - கொள்ளேகால் சாலையில் ரூ.3 கோடியில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலைப்பாதையில் வளைவுகள் மற்றும் விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதியில் இந்த உபகரணங்கள் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பொருத்தப்படுகிறது.

இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருப்பூா் வட்ட கண்காணிப்புப் பொறியாளா் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டாா். ஈரோடு கோட்டப் பொறியாளா் ரமேஷ் கண்ணா, பவானி உதவிக் கோட்டப் பொறியாளா் சேகா், உதவிப் பொறியாளா் பாபு சரவணன், சாலை ஆய்வாளா்கள் கிருஷ்ணசாமி, ரமேஷ் ரவிக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.