தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பெருந்துறை அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு

பெருந்துறை அருகே, கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 7:29 pm

Syndication

பெருந்துறை அருகே, கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த, காசிபில்லாம்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில், சுமாா் 45 வயது மதிக்கதக்க பெண் சடலம் மிதந்து கொண்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள், கம்புளியம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் புவனேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனா். அவா், பெருந்துறை போலீஸில் புகாா் செய்தாா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தவா் யாா், கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனா்.