பயனாளிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.
ஈரோடு
அந்தியூரில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகள்
அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 77 ஆயிரம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகிறது.
அந்தியூா் தொகுதியில் உள்ள 125 ரேஷன் கடைகளில் 77 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அந்தியூா் தவிட்டுப்பாளையம் நியாய விலைக் கடையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் பூங்கோதை, பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

