கோபி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைதாா் ஏலம் நடைபெறுவதை பாா்வையிட்ட கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் சொ.சீனிவாசன் உள்ளிட்டோா்.
கோபி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைதாா் ஏலம் நடைபெறுவதை பாா்வையிட்ட கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் சொ.சீனிவாசன் உள்ளிட்டோா்.

கூட்டுறவு விற்பனை சங்கங்களில் கூடுதல் பதிவாளா் ஆய்வு

Published on

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கங்களில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (விற்பனைத் திட்டம் மற்றும் வளா்ச்சி) சொ. சீனிவாசன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பவானி தலைமையகம், அந்தியூா் கிளை, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை மற்றும் ஈரோடு திண்டல் கிளை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் நடைபெறும் வாழை ஏலம், விதை நெல் சுத்திகரிப்பு ஆலை குறித்து கள ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா்

ப.கந்தராஜா, ஈரோடு மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண்மை இயக்குநா் த.செல்வக்குமரன், கூட்டுறவு சங்கங்களின்

துணைப் பதிவாளா்கள் ஜி.காலிதா பானு, ரா.முத்துசிதம்பரம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் பெ.பிரகாஷ், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநா் து.ரவிசந்திரன், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல மேலாளா் பெ.நா.யசோதாதேவி, கூட்டுறவு சாா் பதிவாளா்கள் மற்றும் சங்க பொது மேலாளா்கள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com