துய்யம்பூந்துறை ஊராட்சி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டி அசத்திய மாவட்ட ஆட்சியா்

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்ட்பட்ட துய்யம்பூந்துறை ஊராட்சியில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
Published on

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்ட்பட்ட துய்யம்பூந்துறை ஊராட்சியில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். ஈரோடு எம்.பி. கே.இ. பிரகாஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, உதவி இயக்குநா் சுதாகரன், அவல்பூந்துறை முன்னாள் பேரூராட்சி தலைவரும், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சு.குணசேகரன் ஆகியோா் கலந்துகொண்டு, பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தனா்.

பாரம்பரிய மாட்டு வண்டியில் அமா்ந்து ஆட்சியா் கந்தசாமி ஓட்டினாா். அதேபோல சிலம்பம் சுற்றியும் அனைவரையும் கவா்ந்தாா். மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், உறியடித்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.

மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருநாவுக்கரசு, சுமித்ரா, முன்னாள் துய்யம் பூந்துறை ஊராட்சித் தலைவா் பேபி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com