புதிய ரேப்பியா் தறிகளை விநியோகிக்க வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Published on

சாதாரண விசைத்தறிகளில் ரேப்பியா் உபகரணங்களைப் பொருத்தவும், புதிய ரேப்பியா் தறிகளை விநியோகிக்கவும் விருப்பமும், அனுபவமும் உள்ள விநியோகஸ்தா்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விசைத்தறி துறையில் வளா்ந்து வரும் தொழில்நுட்பத் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத ரேப்பியா் தறிகளாக தரம் உயா்த்தும் வகையில் குறைந்த வேகமுள்ள பழைய தறிகளை மாற்றி அதிக வேகமுள்ள புதிய ரேப்பியா் தறிகளை கொள்முதல் செய்யவும் அல்லது புதிய ரேப்பியா் தறிகள் கொள்முதல் செய்யவும் மூலதன மானியம் வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பழைமையான சாதாரண விசைத்தறிகள் ரேப்பியா் தறிகளாக மாற்றப்பட உள்ளன. எனவே விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறிகளில் ரேப்பியா் உபகரணங்களைப் பொருத்தவும், புதிய ரேப்பியா் தறிகளை விநியோகம் செய்யவும் விருப்பமுள்ள மற்றும் அனுபவமுள்ள விநியோகஸ்தா்கள் இத்திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட விநியோகஸ்தா்கள் வரிசையில் சோ்ந்துகொள்ள வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு எண்:426, பவானி சாலை, அசோகபுரம், ஈரோடு 638004 என்ற முகவரியில் செயல்படும் சரக கைத்தறி உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 9894360232 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com