பெருந்துறை நகராட்சியில் நடந்த சமத்துவ தைப் பொங்கல் விழாவை தொடங்கிவைத்த முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் உள்ளிட்டோா்.
ஈரோடு
பெருந்துறை நகராட்சியில் சமத்துவ தைப் பொங்கல் விழா
பெருந்துறை நகராட்சியில் சமத்துவ தைப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை நகராட்சியில் சமத்துவ தைப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் ஓசிவி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜி.சண்முகம் முன்னிலை வகித்தாா். ஆணையாளா் கி.புனிதன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று, சமத்துவ தைப் பொங்கல் விழாவை தொடங்கிவைத்தாா். இளைஞா்களுக்கு விளையாட்டுப் பொருள்களை வழங்கினாா்.
நகா்மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

