சுந்தரபெருமாள் கோவிலில் நல்லகண்ணு பிறந்த நாள் விழா
கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் நல்லகண்ணுவின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கும்பகோணம் அருகேயுள்ள சுந்தரபெருமாள்கோவில் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு. அ.பாரதி தலைமை வகித்தாா்.
தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலருமான இரா முத்தரசன், முன்னாள் எம்எல்ஏ பி. பத்மாவதி ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.
விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான நல்லுகண்ணுவின் பிறந்தநாள் விழாவையொட்டி, சமத்துவப்பொங்கல் மூன்று மண் பானைகளில் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்தி பேசினா்.

