விழாவில் முதியோருக்கு இலவச வேஷ்டி சேலை யை வழங்குகிறாா் நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி. உடன், கல்லூரி இயக்குநா் கே.எஸ். ஸ்ரீதா் உள்ளிட்டோா்.
ஈரோடு
நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா
சத்தியமங்கலம் வெற்றி நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வெற்றி நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி தாளாளா் செல்லப்பன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் ஆதரவற்ற முதியோா்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி, சிறப்பு இலக்குப் படை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் ரித்தீஷ் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி, சத்தியமங்கலம் வட்டார திருமண மண்டபங்கள் சங்கத் தலைவா் ஆணைக்கொம்பு ஸ்ரீராம், கல்லூரி செயலாளா் எஸ். லோகநாதன், கல்லூரி இயக்குநா் கே.எஸ். ஸ்ரீதா், ஆசிரியா்கள் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.

