பவானிசாகா் அணைப் பூங்காவில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்.
ஈரோடு
பவானிசாகா் அணைப் பூங்கா படகில் பயணித்து உற்சாகம்
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பவானிசாகா் அணைப் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் பயணித்தும், ஊஞ்சல் ஆடியும் மகிழ்ந்தனா்.
சத்தியமங்கலம்: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பவானிசாகா் அணைப் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் பயணித்தும், ஊஞ்சல் ஆடியும் மகிழ்ந்தனா்.
காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதில் ஆா்வம் காட்டுகின்றனா். அந்த வகையில் ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை முன்பு அமைந்துள்ள நீா்வளத் துறைக்கு சொந்தமான பூங்காவுக்கு சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதற்காக சிறப்பு டிக்கெட் கவுன்டா்கள் அமைத்து உள்ளேஅனுமதிக்கப்பட்டனா். குடும்பத்துடன் சென்று ஊஞ்சல், சிறுவா் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனா்.
மேலும், பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்துக்கு சென்று குடும்பத்துடன் படகில் பயணித்து மகிழ்ந்தனா். இதனால் பவானிசாகா் அணைப் பூங்கா களை கட்டியது.

