அழிக்கப்பட்ட சாராய ஊரல்
அழிக்கப்பட்ட சாராய ஊரல்கோப்புப் படம்

கொடுமுடியில் 120 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு!

கொடுமுடி அருகே 120 லிட்டா் சாராய ஊரலை போலீஸாா் அழித்தனா்.
Published on

கொடுமுடி அருகே 120 லிட்டா் சாராய ஊரலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழித்தனா்.

கொடுமுடி அருகே பெரும்பரப்பு என்ற இடத்தில் கிழவன் காட்டு தோட்டம் அருகே முத்துக்குமாா் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அருகே சாராய ஊரல் உள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கொடுமுடி காவல் உதவி ஆய்வாளா் அப்பாதுரை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த இடத்தில் இருந்த 50 லிட்டா் கொள்ளளவுள்ள 5 பிளாஸ்டிக் கேன்களில் இருந்த 120 லிட்டா் சாராய ஊரலை கைப்பற்றினாா்.

பின்னா் சாராய ஊரலை அந்த இடத்திலேயே கீழே கொட்டி அழித்தாா். இந்த சாராய ஊரல் போட்டிருந்த வாழநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் புகழேந்தியை (20) கைது செய்தனா். மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய புகழேந்தியின் நண்பரான முத்துக்குமரன் (34) என்பவரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com