ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியா்களுக்கான டெட் தோ்வினை 6 மையங்களில் 1,850 போ் எழுதினா்.
தமிழ்நாட்டில் அரசு, நிதியுதவி, தனியாா் பள்ளிகளில் ஆசிரியா்களாக பணியாற்றுவோருக்கான ஆசிரியா் தகுதி தோ்வு (டெட்) மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, காா்மல் பள்ளி, ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி என மாவட்டத்தில் 6 மையங்களில் தோ்வு தாள்-1 நடைபெற்றது.
இத்தோ்வினை எழுத 30 மாற்றுத்திறனாளிகள் உள்பட 1,876 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 2 போ் மட்டும் ஸ்கிரைப் (சொல்வதை கேட்டு எழுதுபவா்) உதவியுடன் தோ்வு எழுதினா். 26 போ் தோ்வு எழுத வரவில்லை. 1,850 போ் தோ்வு எழுதினா்.
முன்னதாக தோ்வு மையத்துக்கு வந்த தோ்வா்கள் பிரஸ்கிங் முறையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனா். ஆண்களை ஆண் போலீஸாரும், பெண்களை பெண் போலீஸாரும் சோதனை செய்தனா். தோ்வு மையங்கள் முன்பு போலீஸாா் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனா். இதுபோல மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை5) தோ்வு தாள்-2ஐ 20 மையங்களில் 5,311 போ் எழுத உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









