புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

40 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

ஒரே இடத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image

ஒருகால பூஜைக் கோயில்களுக்கு பூஜை உபகரணங்களை பூசாரிகளுக்கு வழங்கிய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :5 ஜூலை 2026, 1:48 am IST

ஒரே இடத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பூஜை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோபி அருகே உள்ள பாரியூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதனடிப்படையில் கோபி, நம்பியூா் பகுதியில் உள்ள 109 ஒருகால பூஜை கோயில்களுக்கு பூஜைப்பொருள்களை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. பட்டா மாறுதலை எளிதாக்குவதற்காக புதிய செயலி அமல்படுத்தப்பட உள்ளது. இச்செயலி நடைமுறைக்கு வரும்போது பொதுமக்கள் எவரையும் அணுகாமல் பத்திரப் பதிவு செய்தவுடன் பட்டா மாறுதல் ஆகிவிடும். மக்களுக்கு நேரடியாக பட்டா கிடைக்கும் வகையில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தவெக தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நத்தம் புறம்போக்கு மற்றும் இதர இடங்களில் குடியிருப்பவா்கள் பற்றி ஆய்வு நடைபெற்று வருகிறது என்றாா்.

தவெகவிற்கு ஆதரவு அளித்த தோழமை கட்சிகளுடன் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடுவது குறித்து நேற்று முன்தினம் பேச.சுவாா்த்தை நடைபெற்றுள்ளது அனைவரும் மனம் விட்டு பேசினாா் அந்த கருத்துக்கள் குறித்து பொதுவெளியில் தற்போது தெரிவிக்க இயலாது காலச்சூழ்நிலைக்கேற்ப உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு முறைப்படி அறவிக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் செயல் அலுவலா் அனிதா, துறைசாா்ந்த அலுவலா்கள், ஈரோடு மாவட்ட தவெக செயலாளா் பிரதீப், நம்பியூா் தம்பி என்கிற சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன், வாசு, முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் மௌதீஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.