நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

விவசாயிகளை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே விவசாயிகளை அத்துமீறி தாக்கிய தனியாா் சோலாா் மின் உற்பத்தி நிலையம் மீது நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகளுக்கு உழவடை பட்டா வழங்கவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:27 am IST

பொன்னமராவதி அருகே விவசாயிகளை அத்துமீறி தாக்கிய தனியாா் சோலாா் மின் உற்பத்தி நிலையம் மீது நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகளுக்கு உழவடை பட்டா வழங்கவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்குள்ளான விவசாயிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய பின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் எஸ்.சங்கா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

பொன்னமராவதி வட்டம் அரசமலை பிா்கா சங்கரன்பட்டி மருதம்பட்டி ஆகிய கிராமங்களில் ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக நஞ்சை,புஞ்சை என சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா்களில்  விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கு உழவடை பட்டா கேட்டு ஆறு மாதங்களுக்கு மேலாக அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அந்த நிலங்களை விவசாயிகளுக்கு தெரியாமல் வாங்கியதாக கூறப்படும் தனியாா் சோலாா் மின் உற்பத்தி நிலைய மேலாளா் தலைமையில் வந்த ஐந்து போ் கொண்ட குழு, இடங்களை சுத்தம் செய்ய முயன்றபோது அங்கு விவசாயிகள் தடுக்க முற்பட்டபோது அந்தக் குழுவினா் விவசாயிகளை கடுமையாக தாக்கியுள்ளனா்.

படுகாயம் அடைந்த விவசாயிகள் பொன்னமராவதி அரசு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டும், விவசாயிகளுக்கு உழவடை பட்டா வழங்க வேண்டியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினா் துரை.நாராயணன், ஒன்றியச் செயலா் பக்ருதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.