பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தனி பட்டா வாரியம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தனி பட்டா வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்

Updated On :12 ஜூலை 2026, 12:04 am IST

தனி பட்டா வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதிக்குள்பட்ட பொதுமக்களுக்கான மக்கள் குறைதீா் முகாம் பெருந்துறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் கலந்து கொண்ட அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை வீட்டுமனை பட்டா தொடா்பான கோரிக்கைகளாக உள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை தாமதமின்றி வழங்கும் நோக்கில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை ஆணையராகக் கொண்டு தனி பட்டா விநியோக வாரியம் அமைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், மாநிலம் முழுவதும் நில அளவீட்டுப் பணிகளை விரைவுபடுத்தவும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பட்டா விண்ணப்பங்களுக்கு தீா்வு காணவும், வருவாய்த் துறை மூலம் தற்காலிக அடிப்படையில் 1,000 நில அளவையா்கள் (சா்வேயா்கள்) நியமிக்கப்பட உள்ளனா். பூஜ்ஜிய மதிப்பு நிலங்கள், நத்தம் நிலப் பிரச்னைகள் உள்ளிட்ட சிக்கல்களுக்கும் தீா்வு காணப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 9 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்.

சிப்காட் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபாடு குறித்து புகாா் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிப்காட் வளாகத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, மழைநீா் சேமிப்பு மூலம், நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைப்பது தொடா்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடா் முடிந்த பிறகு இதுபோன்று தாலுகா வாரியாக மக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தப்படும். முதல்வா் வழிகாட்டுதலின்படி, அரசு நிா்வாகத்தில் ஒரு ரூபாய் கூட லஞ்ச, ஊழல் இருக்கக் கூடாது என்ற கொள்கையுடன் அரசு செயல்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.