வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பள்ளி நேரத்துக்கு அரசுப் பேருந்து இயக்க கோரிக்கை

பள்ளி நேரத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பீக்கிரிபாளையம் பழங்குடியின கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பேருந்து வசதி கோரி மனு அளிக்க   சத்தியமங்கலம் போக்குவரத்துக்  கழக  பணிமனைக்கு குழந்தைகளுடன் வந்த  பீக்கிரிபாளையம்  கிராம மக்கள்.

Updated On :15 ஜூலை 2026, 1:07 am IST

பள்ளி நேரத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பீக்கிரிபாளையம் பழங்குடியின கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் ஊராட்சி, பீக்கிரிபாளையம் கிராமத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இந்தக் கிராமத்தில் இருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள சிக்கரசம்பாளையம் அரசுப் பள்ளிக்கு 50 குழந்தைகள் சென்று வருகின்றனா்.

பள்ளி நேரத்துக்கு பேருந்து இயக்கப்படாததால் பழங்குடியின மாணவா்கள் நடந்து சென்று வருகின்றனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் இருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள சிக்கரசம்பாளையம் அரசுப் பள்ளிக்கு குழந்தைகள் சென்று வருகின்றனா்.

பள்ளி நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் அவா்கள் நடந்து சென்று வருகின்றனா்.

நாங்களும் கூலித் தொழிலாளா்களாக உள்ளதால், அவா்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடிவதில்லை. குழந்தைகளின் கல்விக்கு உதவிடும் வகையில் பள்ளி நேரத்துக்கு அரசுப் பேருந்தை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முன்னதாக, தங்களது குழந்தைகளுடன் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக மேலாளரை சந்தித்து கோரிக்கை தொடா்பான மனுவை வழங்கி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.