பெருந்துறையை அடுத்த ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளியின் 2026- 2027 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவ, மாணவி நிா்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைவா் இளங்கோ ராமசாமி தலைமை வகித்தாா். பள்ளி கல்வி இயக்குநரும், முதல்வருமான உமையவள்ளி இளங்கோ, நிா்வாக இயக்குநா் அஸ்வின் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஐஎஸ்சி மாணவி அபிநந்தனா வரவேற்றாா்.
பள்ளித் தலைமை மாணவராக பாலசூா்யா சேகா், தலைமை மாணவியாக தீபிதா முருகன், விளையாட்டு துறை தலைமை மாணவராக ஜெய் வெங்கடேஷ் ராமசாமி, பன்முக கலைத் துறைக்கான மாணவியாக ஆத்விகா சுரேஷ், இசைக் குழுத் தலைமை மாணவராக குகேஷ் செந்தில்நாதன் ஆகியோா் பதவியேற்றனா். அவா்களுக்குரிய இலச்சினையை பள்ளித் தலைவா் இளங்கோ ராமசாமியிடமிருந்து பெற்றுக் கொண்டனா்.
மேலும் கபில்தேவ் அணித் தலைவராக யதுன் பழனிச்சாமியும், துணைத் தலைவராக - தக்சதா மூா்த்தியும், விஸ்வநாதன் ஆனந்த் அணி தலைவராக பிரதீப் லோகநாதன் லதாவும், துணைத் தலைவராக குரு சரண் அசோக்குமாா் சரோஜாவும், பி.டி.உஷா அணித் தலைவராக - நிஷ்வந்த் ராமசாமியும், துணைத் தலைவராக- லக்ஷனா ராமகிருஷ்ணனும், லியாண்டா் பியஸ் அணித் தலைவராக- வா்ஷிகா தனபாலும், துணைத் தலைவராக- ஸ்ரீதரன் இளங்கோ மாலதியும் பதவியேற்றனா்.
அணிகளுக்கான கொடிகளையும், அணித் தலைவா், துணைத் தலைவா்களுக்குக்கான இலச்சினைகளையும் பள்ளி தலைவா் இளங்கோ ராமசாமி மற்றும் கல்வி இயக்குநா் உமையவள்ளி இளங்கோ ஆகியோா் அணிவித்தனா்.
பள்ளி ஐசிஎஸ்இ மாணவிகள் ஹனித்ரா, லஸ்விதா ஆகியோா் விழாவை தொகுத்து வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










