பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் குமுதா மெட்ரிக். பள்ளி மாணவா் சிறப்பிடம்

சிறப்பிடம் பெற்ற மாணவரை பாராட்டி பரிசு வழங்கிய ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவரை பாராட்டி பரிசு வழங்கிய ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :16 ஜூலை 2026, 12:10 am IST

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் நம்பியூா் குமுதா மெட்ரிக். பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றாா்.

தேசிய நுகா்வோா் தினத்தை முன்னிட்டு நுகா்வோா் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஈரோடு மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு கருங்கல்பாளையம் காமராஜ் நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி அண்மையில் நடைபெற்றன.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். ஓவியப் போட்டியில் நம்பியூா் குமுதா மெட்ரிக். பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவன் தரணி மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தாா்.

இதைத்தொடா்ந்து ஈங்கூா் ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கலந்துகொண்டு மாணவா் தரணியைப் பாராட்டி பரிசு வழங்கினாா்.

இதேபோல வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளி செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச்செயலா் டாக்டா் மாலினிஅரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, முதல்வா் மஞ்சுளா, ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.