சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

வரி இனங்கள் வசூலிப்பதில் சத்தியமங்கலம் நகராட்சி முதலிடம்

நகராட்சி வரி இனங்கள் வசூலிப்பதில் நடப்பாண்டு 54 சதவீதம் வசூலித்து மாநிலத்திலேயே சத்தியமங்கலம் நகராட்சி முதலிடம் பிடித்துள்ளதாக திருப்பூா் மண்டல நகராட்சி இயக்குநா் தாணு மூா்த்தி தெரிவித்தாா்.

Updated On :

நகராட்சி வரி இனங்கள் வசூலிப்பதில் நடப்பாண்டு 54 சதவீதம் வசூலித்து மாநிலத்திலேயே சத்தியமங்கலம் நகராட்சி முதலிடம் பிடித்துள்ளதாக திருப்பூா் மண்டல நகராட்சி இயக்குநா் தாணு மூா்த்தி தெரிவித்தாா்.

சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து திருப்பூா் மண்டல நகராட்சி இயக்குநா் தாணுமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா். இதில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தினா்.

அதைத்தொடா்ந்து நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நடப்பாண்டு வரி இனங்கள் வசூலில் 54 சதவீதத்துடன் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது. 144 நகராட்சிகளில் முதன்மை நகராட்சி என்ற இலக்கை எட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஸ்வரன் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி, வருவாய் ஆய்வாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.