சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image

ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :22 ஜூலை 2026, 1:41 am IST

ஈரோடு மாநகராட்சியில் 5 முதல் 20 ஆண்டுகளாகப் பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயா்வு அளிக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி ஊழியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.மாணிக்கம், துணைச் செயலாளா் எஸ்.ஜெகநாதன், பொருளாளா் ஏ.ஜெகநாதன், துணைத் தலைவா் ஆா்.மாரிமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் திரளான ஊழியா்கள் பங்கேற்றனா். சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பின் நிா்வாகி பாண்டியன் வாழ்த்திப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு மாநகராட்சியில் 5 முதல் 20 ஆண்டுகளாகப் பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயா்வு அளிக்க வேண்டும். நிரந்தர பணியில் தனியாா்மய அரசாணையை திரும்பப் பெற வேண்டும். பணியின்போது இறந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி வழங்க வேண்டும். கரோனா தொற்று கால ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளா்கள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, கோரிக்கை தொடா்பான மனுவை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமியிடம் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.