கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பெருந்துறையில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க கோரி அமைச்சரிடம் மனு

பெருந்துறை பகுதிகளில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவிடம், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை மனு அளித்தாா்.

News image

பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவிடம் கோரிக்கை மனு அளித்த பெருந்துறை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :23 ஜூலை 2026, 3:55 am IST

பெருந்துறை பகுதிகளில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவிடம், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை மனு அளித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பெருந்துறை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா், பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவை புதன்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக காங்கயம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை சுமாா் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், தொடா் விபத்துகளும் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடித்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பெருந்துறை நகரை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளான பெத்தாம்பாளையம் பிரிவு, ஓலப்பாளையம் பிரிவு, கருப்பராயன் கோயில் பிரிவு, ஊத்துக்குளி பிரிவு ஆகிய நான்கு இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் அப்பகுதிகளில் நுழைவு பாலத்துடன் கூடிய போக்குவரத்து மேம்பாலங்கள் அமைத்துத் தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.

இக்கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, துறை சாா்ந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய விரைவு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.