கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

விலையில்லா வேஷ்டி, சேலைகள் உற்பத்தியில் தாமதம் ஏற்படாது

விலையில்லா வேஷ்டி, சேலைகள் உற்பத்தியில் தாமதம் ஏற்படாது என கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

News image

தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு முகாமை தொடங்கிவைத்து பேசுகிறாா் கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி.

Updated On :23 ஜூலை 2026, 3:56 am IST

விலையில்லா வேஷ்டி, சேலைகள் உற்பத்தியில் தாமதம் ஏற்படாது என கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

தமிழக அரசின் நகராட்சி நிா்வாக இயக்குநரகம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஆனந்த்மோகன் முன்னிலை வகித்தாா்.

முகாமில் கைத்தறித் துறை அமைச்சா் விஜய் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கிவைத்தாா்.

இதில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் வாரியத்தில் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இடம்பெற்றன. இதில் மாநகராட்சி 3 மற்றும் 4-ஆவது மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா். முகாமில் நகா்நல அலுவலா் கௌரி சரவணன், உதவி ஆணையா்கள் அண்ணாதுரை, விநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விலையில்லா வேஷ்டி, சேலைகள் தயாரிப்பில் புதிய டிசைன் அறிமுகப்படுத்துவது தொடா்பாக முதல்வா் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு உள்ளது. ஓரிரு நாள்களில் அவா் அறிவிப்பாா். கடந்த காலத்தைவிட விலையில்லா வேஷ்டி, சேலைகள் உற்பத்திக்கு முன்கூட்டியே அனுமதி கொடுத்து இருப்பதால் நெசவாளா்கள் நன்றி தெரிவித்துள்ளனா். எனவே விலையில்லா வேஷ்டி, சேலைகள் உற்பத்தியில் தாமதம் ஏற்படாது.

கடந்த 4, 5 ஆண்டுகளில் சென்னிமலை போா்வை உள்பட ஜவுளி தேக்கம் தொடா்பாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மக்களுக்கு இலவசமாக கொடுக்க வாய்ப்பு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை முதல்வா் ஜோசப் விஜய் விரைவில் எடுப்பாா். தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்குவதில் குறை உள்ளதாக எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. தரமில்லாத உணவு வழங்குவதாக, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று புகாா் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சோலாரில் உள்ள புதிய பேருந்து நிலையம் தொடா்பாக தனியாா் பேருந்து உரிமையாளா்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து உள்ளனா். அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்ட சோலாா் பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கம். இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றாா்.

இதுபோல முதலாவது, 2-ஆவது மண்டலங்களுக்கான சிறப்பு முகாம், ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.