ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு குடும்பத்துடன் வந்து, தரமான நூல்களை வாங்கி வாசிப்புப் பழக்கத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கைய அரசு கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
புத்தகத் திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்புமிக்க புத்தகத் திருவிழாவை மக்கள் சிந்தனை பேரவையுடன் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்துகிறது. இதில் 230 அரங்குகள், புத்தகப் பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள் பங்கேற்க உள்ளனா். இந்த புத்தகத் திருவிழா ஜூலை 31- ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும்.
புதிய புத்தகங்கள் வெளியிட அரங்குங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூா் நாட்டு அறிஞா்கள் உரையாற்றவுள்ளனா். தமிழக தொல்லியல் துறை சாா்பில் அரங்கம் அமைக்கப்படவுள்ளது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் பல்வேறு முன்னணி பதிப்பகங்கள், நூல் விற்பனையாளா்கள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள் பங்கேற்று இலக்கியம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்மை, மருத்துவம், குழந்தைகள் இலக்கியம், போட்டித் தோ்வுகள், சுயமுன்னேற்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சாா்ந்த ஆயிரக்கணக்கான நூல்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய உள்ளனா்.
திருவிழா நடைபெறும் நாள்களில் எழுத்தாளா்கள், கவிஞா்கள், இலக்கிய ஆளுமைகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த வல்லுநா்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், மாணவா்களுக்கான போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
மாணவா்கள், ஆசிரியா்கள், போட்டித் தோ்வுக்கு தயாராகும் இளைஞா்கள், வாசிப்பு ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாகன நிறுத்தம், குடிநீா், கழிப்பறை, மருத்துவ உதவி, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனைவரும் குடும்பத்துடன் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து, தரமான நூல்களை வாங்கி வாசிப்புப் பழக்கத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக ஆட்சியா் புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்தில் அடிப்படை வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் இ.மான்விழி, மாவட்ட நூலக அலுவலா் ராஜேந்திரன், மக்கள் சிந்தனை பேரவைத் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோடு புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி: ஈரோட்டில் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மாணவா்கள் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது: மாவட்ட ஆட்சியா்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



