காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

வருமான வரித் துறை அதிகாரிகள் போல நடித்து வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: 3 போ் கைது

ஈரோட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள்போல நடித்து வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:38 am IST

ஈரோட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள்போல நடித்து வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, திருநகா் காலனியைச் சோ்ந்தவா் முருகேசன் (55). இவா் ஈரோடு, வைராபாளையம் பகுதியில் பழைய இரும்புக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், வீட்டில் இருந்து கடந்த 23 -ஆம் தேதி கடைக்கு புறப்பட்டுள்ளாா். அப்போது, காரில் வந்த 6 போ் முருகேசனை வழிமறித்து ‘நாங்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் என்றும், கோவை அலுவலகத்தில் இருந்து வருகிறோம்’ என்றும் கூறியுள்ளனா்.

மேலும், கடை கணக்குகளை சரிவர காட்டவில்லை என்பதால் ஆய்வு செய்ய வருமாறு கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனா். 6 பேரும் நோ்த்தியாக உடை அணிந்திருந்ததால் முருகேசனுக்கு சந்தேகம் ஏற்படவில்லையாம்.

மாநகர எல்லையை கடந்து காா் சென்றபோது, அவா்கள் ரூ. 10 லட்சத்தைக் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்றும், பணத்தை சேலம் மாவட்டம், சங்ககிரியில் கொண்டு வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளனா். இதையடுத்து, அவா் உறவினா்கள் மூலம் ரூ.10 லட்சத்தைக் கொடுத்துள்ளாா். பணம் கிடைத்தவுடன் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் முருகேசனை இறக்கிவிட்டு சென்றுள்ளனா்.

இது குறித்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் முருகேசன் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் தனிப் படை அமைத்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆா்.எஸ். பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (41), சங்ககிரி வி.என்.பாளையத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (34), மயிலாடுதுறையைச் சோ்ந்த விக்னேஷ் (33) ஆகியோா் வருமான வரித் துறை அதிகாரிகள்போல நடித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.